ஐயன் பந்தி - 19
நெருப்பு திருவாடல் - 6 "வலியது என்றாள் என்ன ?" முதுவன் கேட்டார் "இந்த மலை வலியது" என்றான் வளைஞன். "அதைத்துளைத்து கீறிய விதை அதனினும் வலியது அல்லவா?" என்றார் முதுவன் "இல்லை, அது விளைய தன்னை நெகிழ்த்திக்கொண்ட மலையே வலியது" என்றாள் அரசியாள். "மான் மீது பாயும் வேங்கை வலியது தான், ஆனால் தன் குட்டியை காப்பாதற்காக, அதன் குறுக்கே பாய்ந்து தன்னுயிரை கொடுக்கும் தாய் மான் அதனினும் வலியது” என்றான் வளைஞன். "நாள் எல்லாம் அலைந்து, பசித்து, கலைத்து, கொளுத்த பன்றி ஒன்றினுக்கு குறிவைத்த வேட்டைக்காரன், அதன் மடியை முட்டி பாலருந்தும் குட்டிகளை கண்ட போது அதை விட்டுட்டு உணவருந்தாமல் இரவு உறங்குவான் என்றால், அவன் தாய் மானினும் வலியவனாவன் அல்லவா?" என்றார் முதுவன். 'ஆம்' என்றாள் அரசியாள் "கருணையும், அன்பும், நல்லுணர்வுகள் அத்தனையும், வலியதே. அதை விடவும் வலியது என எதுவும் உண்டா" ? அரசியாளும், வளைஞனும் பதில் எதுவும் சொல்லாமல் அவரையே நோக்கி அவர் மேலும் சொல்லக்காத்திருந்தார்கள். “மானை படைத்து அதை உண்ணும் வேங்கையையும் படைத்தது எதுவோ,...