இடுகைகள்

ஐயன் பந்தி - 16

நெருப்பு திருவாடல் - 3 முதல் நாள் கதை முடிந்து வீடு திரும்பிய போது, வானம் புலர சிறு பொழுதே இருந்தது. இன்னும் ஏழு நாள் கதை மீதம் இருக்கிறது. அக்கா குருவிகள் கொல்லைகளில் மரத்துக்கு மரம் அமர்ந்து சிலம்பும் அக்கோவ் குரல்கள் கேட்க தொடங்கியிருந்தன. நான் கோவிந்தன் தாத்தாவீட்டு திண்ணையிலே கையை தலைக்கு வைத்து படுத்து உறங்கிவிட்டேன். ஆச்சி தான் எழுப்பி உமிக்கரியும் செம்பில் நீரும் கொடுத்து பல் விளக்கச்சொல்லி, நீராகாரமும் கொடுத்தாள்.  என்றும் இல்லாத வழக்கமாக ஐயர் காலையிலேயே தெருவுக்குள் வந்தார். தாத்தா வழக்கம் போல கருக்கலிலேயே நீராடி நெற்றியில் இட்ட திருநீற்றோடு, முந்தைய இரவின் உறக்க சடவே இல்லாமல், அமர்ந்திருந்தார். ஐயர் திண்ணையில் அமர்ந்தபடி, உறக்கம் முழுதும் கலையாத என்னைப்பார்த்து, "என்னடா அம்பி வில்லடியா நேற்று" என்று விட்டு தாத்தாவிடம், என்ன கதைடா படிச்சான் என்றார். "அஷ்ட காளி கதை" என்றார் கோவிந்தன் தாத்தா. "ஏன் டா, அம்பி சுந்தரம் நீ கேட்ட கதையை சொல்லேன் கேட்போம்" என்றார் ஐயர். நானும் நினைவில் இருந்து கதையை திரட்டி சொல்லத்துவங்கினேன். பாட்டியும் தாத்தாவும் கூட அ...

ஐயன் பந்தி - 15

நெருப்பு திருவாடல் - 2 "அண்ணாச்சி, அண்ணாச்சி, இப்பதான் எனக்கு ஒரு உண்மை விளங்குச்சு" என்றார்  குடத்துக்காரர்  "விளங்கிடுச்சா, அது என்ன உண்மை" என்றார் வில்லடிக்காரர். "அந்த கல்பத்தில" "எந்த கர்பத்தில" "கர்ப்பம் இல்ல அண்ணாச்சி, கல்பத்தில" "சரி எந்த கல்பத்தில?" "க்ருத யுகத்துல பிரம்மாவுக்கு ஒரு தலை போச்சே, அந்த கல்பத்துக்கு" "அந்த கல்பத்துக்கு என்ன?" "அந்த கல்பத்துக்கு நான் தான் பிரம்மா" "அடேய், சொல்றதுக்கும் வர முறை வேண்டாமா?" "இல்ல அண்ணாச்சி நான் சொல்றத முழுசா கேளுங்க" "சரி சொல்லு அந்த கல்பத்திலையாது, அஞ்சு தலை இருந்துச்சு ஒண்ண வெட்டினார் சிவன், இப்ப ஒரு தலை தான் இருக்கு, நான் என்னத்த வெட்ட" "அதில்ல அண்ணாச்சி, அந்த கல்பத்தில பிரம்மாவா இருந்தனா?" "இருந்த, திரும்ப இங்க வந்து ஏன்டா பிறந்த? என் உசுர எடுக்கவா" "படைக்கைல ஒரு பெரிய பாவத்தை பண்ணிபோட்டேன், அதான் இப்படி மனுஷ பிறவியா பிறந்து லோல்படுறேன்" "அப்படி என்ன பாவத்தை செஞ்சீரு பிரம்ம தேவர...

ஐயன் பந்தி - 14

நெருப்பு - 2 திருவாடல் - 1 கழல் சூடி ஊன்றிய வலப்பாதத்தின் பெருவிரல் அச்சிற் சுழன்றது ஒரு செந்நிறத் தழல். உள் பாதத்தின் குழிவில் ஒரு துளி கரும்புள்ளி. அது சுழன்று பின் சிதறி ஒன்று நூறு என ஒளிப்புள்ளிகளைச் சிந்தி சிதறி ஆயிரம் வண்ணங்கள் காட்டி பறந்தது. அதில் பிறந்தனர் ஆயிரம் ஆயிரம் ஆதித்தியர்கள், ஆயிரம் ஆயிரம் சந்திரர்கள், ஆயிரம் ஆயிரம் கோளங்கள், அவைடங்கிய ஆயிரம் அண்டங்கள். அண்டங்களை கருச்சுமந்த பேரண்டங்கள். சுழலும் அப்பாதம் பதிந்த போது மறைந்து, மீண்டும் எழுந்த போது பிறந்தது காலம். காலமற்ற பாழில் நிகழும் அச்செந்நிற தழலாட்டத்தை அது மட்டுமே அறிந்திருந்தது. அல்லது அதுவும் அறிந்திருக்கவில்லை. அங்கு அறிதலும் இல்லை. தூக்கிய இடப்பாதம் வலப்புறமாய்  அந்தரத்தில் நிலைக்க,  இடைவளைத்த புலி தோல் ஆடை தொடை மறைத்து தொங்கி சுழன்றது. கரியானை தோல் உறிவொன்று இடத்தோல் மூடி வலப்புறமாய் வளைந்து விரிந்து பறந்தது. கண்டத்தில் நீல மணி மின்னென ஒளிவிட, நிமிர்ந்த  முகத்தில், இருவிழிகளும் மலர, நடு நுதலில் கண் ஒன்று தீவிழித்தது. சிவந்த சடைக்கற்றைகள் பின்னிச் சுழலும் தலை மு...

ஐயன் பந்தி - 13

நெருப்பு - 1 மீனாக்ஷி பாட்டி அடுப்படியில் இருந்தாள்.  சன்னமாக அவள் பாடும் குரல் கேட்டு கொண்டிருந்தது.  ஒரு கண்ணி பிச்சிப்பூ  ஒரு  முழத்தில் ஒரு சரமாம் - அம்மா நீ  ஒசிஞ்சு வைக்கும் கால்களுக்கு ஒலிக்கும் மணி கொலுசுகளாம்   மூனு கண்ணி பூவுனக்கு   மூம்முழத்தில் ஒரு சரமாம் - அம்மா நீ  முன்னே வைக்கும் கால்களுக்கு  முத்து மணி தண்டைகளாம் ஐந்து கண்ணி பூவுனக்கு  ஐம்முழத்தில் ஒரு சரமாம் - அம்மா உனக்கு  அஞ்சு விரலும் மோதிரமாம்  அஞ்சு வித வளையல்களாம் ஏழு கண்ணி பூவுனக்கு ஏழு முழத்தில்  ஓரு சரமாம் - அம்மா உன்  எல்லையில்லா பேரழகாம்  எடுத்து வச்ச சீரடியாம்  நூறு கண்ணி பிச்சிப்பூ    நூறு முழத்தில் ஒரு சரமாம் - அம்மா உனக்கு  அள்ளி முடிஞ்சுவிட்டு  ஆசையாக சூடி வைப்பேன்  ஓரடிக்கு ஒரு வளைவாம்  ஈரடிக்கு  இரு வளைவாம்  அடியடியா வைச்சல்லோ  அம்மா நீ வருகையிலே சர்ப்பத்தின் நடையல்லோ   நாகமணி பொட்டல்லோ   தாழம்பூ குடையல்லோ  மஞ்சள் வண்ண பட்டல்லோ  மஞ்சளிலே கா...

ஐயன் பந்தி - 12

படம்
புவியேழையும் பூத்தவளே - 8 செண்பகமும்,  மனோரஞ்சிதமும், செந்நிறத்தில் பூத்த அலரியும், காந்தளும், இளம் பொன்னிறத்தில் மகிழமும், கண்ணாயிக்குரிய செந்தாழை மடல்களும், செருவிளமும், கருவிளமும், வெண்ணிறத்தில் பலவகை மலர்களோடு கூட பவள மல்லிகை மலரும் கூட்டி தொடுத்த கதம்பத் தொடையை சாற்றி, பல வண்ணங்கள் கொண்ட தானையோடு செல்லியாயிக்கு பூசை.   எழுவரிலும் இளையவள். அதனாலயே அனைவருக்கும் இனியவள். எண்ணி முடியாத முகங்கள் அவளுக்கு. புன்னகைக்கும் எவர் முகத்திலும்  அவள் முகமே அக்கணத்தில் தோன்றி மறையும் என்பார்கள்.  சிறுபிள்ளைகள் சிரித்து விளையாடுவது கண்டால் காற்றாக மாறி அவர்கள் தலைகள் கோதி தானும் அவர்களோடு விளையாடுவாள். அவர்கள் இடும் கூச்சலாகி மலைகளில் மோதி எதிரொலிப்பாள். சிறுக்கி என்று இருந்தவள் உடலை பூக்கவைத்து பெண் என்று மலர்விப்பாள்.  சிறுவர்கள் கனவுக்குள் சென்று அமுதத்தின் மடை திறந்து,  ஆண் என்று அறியவைப்பாள்.  இவள் தீண்டும் வரை மழலை என்று இருந்தவர்கள், இள வியர்வை மணமும், முகத்தில் பூங்குருக்களும் கொண்டு இனிமை கொள்வார்கள். ஆணை பெண்ணுக்கும் பெண்ணை ஆணுக்கும் அறிவிப்பவள் அவ...