ஐயன் பந்தி - 15
நெருப்பு திருவாடல் - 2 "அண்ணாச்சி, அண்ணாச்சி, இப்பதான் எனக்கு ஒரு உண்மை விளங்குச்சு" என்றார் குடத்துக்காரர் "விளங்கிடுச்சா, அது என்ன உண்மை" என்றார் வில்லடிக்காரர். "அந்த கல்பத்தில" "எந்த கர்பத்தில" "கர்ப்பம் இல்ல அண்ணாச்சி, கல்பத்தில" "சரி எந்த கல்பத்தில?" "க்ருத யுகத்துல பிரம்மாவுக்கு ஒரு தலை போச்சே, அந்த கல்பத்துக்கு" "அந்த கல்பத்துக்கு என்ன?" "அந்த கல்பத்துக்கு நான் தான் பிரம்மா" "அடேய், சொல்றதுக்கும் வர முறை வேண்டாமா?" "இல்ல அண்ணாச்சி நான் சொல்றத முழுசா கேளுங்க" "சரி சொல்லு அந்த கல்பத்திலையாது, அஞ்சு தலை இருந்துச்சு ஒண்ண வெட்டினார் சிவன், இப்ப ஒரு தலை தான் இருக்கு, நான் என்னத்த வெட்ட" "அதில்ல அண்ணாச்சி, அந்த கல்பத்தில பிரம்மாவா இருந்தனா?" "இருந்த, திரும்ப இங்க வந்து ஏன்டா பிறந்த? என் உசுர எடுக்கவா" "படைக்கைல ஒரு பெரிய பாவத்தை பண்ணிபோட்டேன், அதான் இப்படி மனுஷ பிறவியா பிறந்து லோல்படுறேன்" "அப்படி என்ன பாவத்தை செஞ்சீரு பிரம்ம தேவர...