ஐயன் பந்தி - 13
நெருப்பு - 1 மீனாக்ஷி பாட்டி அடுப்படியில் இருந்தாள். சன்னமாக அவள் பாடும் குரல் கேட்டு கொண்டிருந்தது. ஒரு கண்ணி பிச்சிப்பூ ஒரு முழத்தில் ஒரு சரமாம் - அம்மா நீ ஒசிஞ்சு வைக்கும் கால்களுக்கு ஒலிக்கும் மணி கொலுசுகளாம் மூனு கண்ணி பூவுனக்கு மூம்முழத்தில் ஒரு சரமாம் - அம்மா நீ முன்னே வைக்கும் கால்களுக்கு முத்து மணி தண்டைகளாம் ஐந்து கண்ணி பூவுனக்கு ஐம்முழத்தில் ஒரு சரமாம் - அம்மா உனக்கு அஞ்சு விரலும் மோதிரமாம் அஞ்சு வித வளையல்களாம் ஏழு கண்ணி பூவுனக்கு ஏழு முழத்தில் ஓரு சரமாம் - அம்மா உன் எல்லையில்லா பேரழகாம் எடுத்து வச்ச சீரடியாம் நூறு கண்ணி பிச்சிப்பூ நூறு முழத்தில் ஒரு சரமாம் - அம்மா உனக்கு அள்ளி முடிஞ்சுவிட்டு ஆசையாக சூடி வைப்பேன் ஓரடிக்கு ஒரு வளைவாம் ஈரடிக்கு இரு வளைவாம் அடியடியா வைச்சல்லோ அம்மா நீ வருகையிலே சர்ப்பத்தின் நடையல்லோ நாகமணி பொட்டல்லோ தாழம்பூ குடையல்லோ மஞ்சள் வண்ண பட்டல்லோ மஞ்சளிலே கா...